தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ஓலை சப்பர பவனி

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவ சப்பர பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 6:30 am IST

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவ சப்பர பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவம் கடந்த 3-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா கொடியேற்றம் மே 4-ம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு வசந்த உத்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, அம்பாள் மகாலெட்சுமி அலங்காரத்தில்  சின்ன யானை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை இரவு ஓலை சப்பர பவனி நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் அம்பாள் ஓலை சப்பரத்தில் காட்சியளித்தார். பாரம்பரிய முறைப்படி, வழக்கமான வீதிகளில் ஓலை சப்பரம் வலம் வந்து நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

செடில் உத்சவம்: பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா மற்றும் செடில் உத்சவம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டமும், மாலையில் செடில் உத்சவமும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.