செருமங்கலத்தில் மக்கள் மறியல்
மன்னார்குடி அருகேயுள்ள செருமங்கலம் ஊராட்சியை பிரித்து, புதிய ஊராட்சி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி அருகேயுள்ள செருமங்கலம் ஊராட்சியை பிரித்து, புதிய ஊராட்சி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செருமங்கலம் ஊராட்சியில் இருக்கும் அத்திக்கோட்டை, பள்ளாக்கொல்லை, அண்ணாபுரம் காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி அத்திக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சியை உருவாக்க வேண்டும்.
இந்த ஊராட்சியை மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். 1500 குடும்பகளுக்கு பயன்படும் அத்திக்கோட்டை பகுதி நேர அங்காடியை முழு நேர அங்காடியாக அறிவிக்க வேண்டும்.
புறம்போக்கு, கோயில் இடங்களில் நீண்ட காலமாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செருமங்கலத்தில் மன்னார்குடி, தஞ்சை பிரதான சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில் (அதிமுக) அன்பழகன், (திமுக) ஜெயகோபி, (காங்.) வி.சுப்பிரமணிóயன்,(தேமுதிக) டி.அசோக், (சிபிஎம்) எம்.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூறு பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மன்னார்குடி வட்டாட்சியர் கோவிந்தராஜ், நீடாமங்கலம் ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன், வடுவூர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

