
அவுரிக்காடு - வண்டல் இணைப்புப் பால கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் அவுரிக்காடு - வண்டல் இணைப்புப் பால கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் அவுரிக்காடு - வண்டல் இணைப்புப் பால கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.என். தமிழ்வாணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:
கொளப்பாடு வனஜா காளிதாசன்: பாசனத்துக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்.
கொத்தங்குடி ராஜகுரு: கொத்தங்குடி கிராமத்தில் 350 குடியிருப்புகளுக்கு அணைக்கரை கூட்டுக் குடிநீர் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் சீரான மின் விநியோகம் இல்லை.
அவுரிக்காடு ராதா: உம்பளச்சேரி - திருத்துறைப்பூண்டி அரசுப் பேருந்தை கள்ளிமேடுவரை நீட்டிக்க வேண்டும்.
வெள்ளப்பள்ளம் மகேஸ்வரி: வெள்ளப்பள்ளத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை பழுது நீக்க வேண்டும்.
துணைத் தலைவர் வாசுதேவன்: அணைக்கரை குடிநீர் திட்டப் பிரச்னையை தீர்க்க உறுதியான நடவடிக்கை தேவை.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.சண்முகராஜ்: தலைஞாயிறு பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க, அரிச்சந்திரா நதியின் கரைகளை பலப்படுத்தி, மரக் கன்றுகள் நட வேண்டும்.
தலைவர்: வண்டல் -அவுரிக்காடு இணைப்பு பாலம் கட்டும் பணி முடங்கியுள்ளது குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




