தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

டிசம்பரில் விதைப் பண்ணை பயிற்சி: நாகை ஆட்சியர்

விதைப் பண்ணை அமைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் நாகை ஆட்சியர் சு. பழனிசாமி.

Updated On :

விதைப் பண்ணை அமைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் நாகை ஆட்சியர் சு. பழனிசாமி.

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 50,000 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பும் 88,900 ஹெக்டேரில் நடவும் என மொத்தம் 1,38,900 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 19,579 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பும், திருந்திய நெல்சாகுபடி முறையில் 2580 ஹெக்டேர் மற்றும் சாதாரண முறையில் 1845 ஹெக்டேர் ஆக மொத்தம் 4425 ஹெக்டேர் நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  சம்பா பருவத்தில் பாய் நாற்றங்கால் 70 ஹெக்டேர் சாதாரண நாற்றங்கால் 705 ஹெக்டேர் ஆக மொத்தம் 775 ஹெக்டேர் நாற்றங்கால் இருப்பில் உள்ளது.

வேளாண்மைத் துறையில், சான்று பெற்ற நெல் விதைகள் 468 மெ. டன்களும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நெல் விதைகள் 636 மெ. டன்களும் இருப்பில் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் யூரியா 6060, டிஏபி 2808, பொட்டாஷ் - 1460, காம்ப்ளக்ஸ் - 407 ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளன.

விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ. 10 மான்யத்தில் 430 மெ.டன் நெல் விதை வழங்க இலக்கு பெறப்பட்டு, நெல் விதை விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான பயறு வகைகளை விதைப் பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்ய விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி டிசம்பர் மாதத்தில் அளிக்கப்பட உள்ளது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. பெஞ்சமின்பாபு, வேளாண்மை இணை இயக்குநர் டி. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.