கிராம வளர்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பணி இன்றியமையாதது
கிராம வளர்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் கூறினார்.


கிராம வளர்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் கூறினார்.
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: கிராமத்தின் நீடித்த வளர்ச்சிக்கு, நீடித்த திட்டங்கள் தேவைப்படுகின்றன. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் புதிய, புதிய பணிகளை செயல்படுத்தி, கிராமத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.
தமிழக அரசு சாலை, குடிநீர், கட்டடம் உள்பட மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள், பொதுமக்களைச் சென்றடைவது கண்காணித்து உறுதி செய்யும் பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலர்களைச் சார்ந்துள்ளது.
ஒரு கிராமத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வாய்ப்பு மற்ற அலுவலர்களை விட, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகம் உள்ளது. கிராமத்தின் வளர்ச்சி, மாநிலத்தின் வளர்ச்சி. ஒரு மாநிலம் வளர்ச்சிப் பெற்றால் அது, நாட்டையே வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும். அந்த வகையில், கிராமத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் மனத்திருப்தி அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார்.
ஊராட்சிகள் உதவி இயக்குநர் மோகன், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் மதுமதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...