நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவேதாரண்யேசுவரர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், பிரதோஷ நாயகர் வீதியுலா நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.