மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் வட்டச் செயலாளர் சி. மேகநாதன் தலைமையில், கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் கட்சிக் கொடி அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வா. சிங்காரவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் து. கணேசன், எம். மணி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலார் பி. மாரியப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியப் பொருளாளர் கங்காதரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலாளர் ஏ. அறிவழகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
பின்னர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் மத வெறியைத் தூண்டுவதாகக் கூறி, பிரதமர் உருவப் பொம்மையை எரித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...