பண மதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவ. 8-ஆம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து வேதாரண்யத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவ. 8-ஆம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து வேதாரண்யத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு நவ. 8-ஆம் தேதி மத்திய அரசு உயர் மதிப்புடைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு செய்து அறிவித்தது. இந்த நாளை கருப்பு நாளாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி, வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாகை மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ் தலைமை வகித்தார். வட்டார நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சிவப்பிரகாசம், சங்கர வடிவேல், சந்திரசேகரன், கணேசன், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கீழ்வேளூரில்: இதேபோல், கீழ்வேளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் வட்டத் தலைவர் சையது பிஹிம் சாகிப் தலைமையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில்...
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட நவம்பர் 8-ஆம் தேதியைக் கருப்பு நாளாக அறிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் நாகை (தெற்கு) மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்று, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், பெரிய கடைத்தெரு பகுதிக்கு ஊர்வலமாகச் சென்ற அவர்கள், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...