மயிலாடுதுறையில் கந்து வட்டிவாங்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை வட்டம் நீடூர், தாமரைத் தெருவைச் சேர்ந்த செ. சத்தியா(30)விடம், நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த க. ராஜேந்திரன் (67) ரூ. 75 ஆயிரம் கடன் கொடுத்து மாதாந்தோறும் கந்து வட்டி வாங்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து சத்தியா (30) அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து க. ராஜேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.