பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி: மாணவியர் பங்கேற்பு

நாகை நெல்லுக்கடை தெருவில்  உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நாகை நெல்லுக்கடை தெருவில்  உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி பரிமாற்றம் எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி, திருமருகல் அருகேயுள்ள  குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 20 மாணவியர்  நாகை நெல்லுக்கடைத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்தனர். மாணவியரை நாகை மாவட்ட கல்வி அலுவலர் ஆஷாத் கிறிஷ்டி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், இரு பள்ளி மாணவியரும் ஒன்றாக அமர்ந்து பாடங்கள் படித்ததோடு, கலைநிகழ்ச்சி, விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com