அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை: நாகையில் ரூ.8,880, திண்டுக்கல்லில்  ரூ.2.10 லட்சம், ராமநாதபுரத்தில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை திடீர் சோதனை

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:07 am

DIN

நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் நாகப்பட்டினத்தில் ரூ.8,880, திண்டுக்கல்லில் ரூ.2.10 லட்சம், ராமநாதபுரத்தில் ரூ.50ஆயிரம் என கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறம் நாகை வட்டாரப்  போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு உரிமம் எடுப்பது, புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில்  இந்த அலுவலகத்துக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆய்வாளர்கள் மனோகரன், ரத்தினவள்ளி தலைமையிலான அலுவலர்கள் வந்துள்ளனர். பின்னர் அங்கு சோதனை நடத்தப்படுவதாகக்  கூறி, வெளியில் கதவை சாத்தி விட்டனர்.
இதனால் வெளியிலிருந்து  உள்ளேயும்,  உள்ளிருப்பவர்கள் வெளியேயும் செல்ல முடியவில்லை.    இரவு 8.30 மணி வரை நடைபெற்ற சோதனையில் அலுவலகத்திலிருந்த ஆவணங்கள்,  ரொக்கம் உள்ளிட்டவை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக்  கூறப்படுகிறது. முடிவில் கணக்கில் வராத பணம் ரூ. 8,880 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து  வழக்குப்
பதியப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பி.சத்தியசீலன், ஆய்வாளர்கள் ஜெ.ரூபா கீதா ராணி, ஆர்.கீதா ஆகியோர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு திடீரென நுழைந்தது.
அப்போது அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், அனைத்துப் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ள பீரோவுக்கு பின்புறம், கோப்புகள் வைக்க பயன்படும் ரேக்குகளுக்கு இடையில்,  அடியில், அலுவலக மாடியில் என பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த பணம் உரிமம் பெற்றுக் கொடுக்கும் முகவர்கள் மூலம் பெறப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2,10,405 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, அலுவலக தலைமை அலுவலர் என்ற முறையில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மூலம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.
ராமநாதபுரத்தில்...
 ராமநாதபுரம் பாரதிநகரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அருகிலேயே வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு  காவல் ஆய்வாளர்கள் ஜானகி,விமலா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை நடத்தினர்.  
அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் வெளியில் சென்றிருந்தார். அங்கு பணியில் இருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன், அலுவலக கண்காணிப்பாளர் கோபிராஜன் ஆகியோரிம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், முகவர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில்  கணக்கில் காட்டப்படாத ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சியில்...
திருச்சி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அறந்தாங்கியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இதில்  ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 80 ஆயிரமும், கும்பகோணத்தில் ரூ. 15 ஆயிரமும்,  அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்  ரூ.1 லட்சத்து 35 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.