நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

சகோதரர் வீட்டில் திருடியவர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சகோதரர் வீடு உள்ளிட்ட இரு இடங்களில் நகை, பணம், நெல் திருடியதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:53 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சகோதரர் வீடு உள்ளிட்ட இரு இடங்களில் நகை, பணம், நெல் திருடியதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பிராந்தியங்கரை ஊராட்சி, அண்டகத்துறை, கொள்ளிமேட்டுத்திடல் பகுதியைச் சேர்ந்த காத்தான் மகன்கள் ரமேஷ் (35), சங்கர் (32). இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ரமேஷ், அவரது மனைவி பொன்னம்மாள் உள்ளிட்டோர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டனர்.  இதனால், பூட்டியிருந்த அவர்களது வீட்டின் பின்பக்கமாகச் சென்ற சங்கர், ஒரு கிராம் மோதிரம்-2, ரூ.19,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாராம். இதுகுறித்து கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் அளித்தார். விசாரணையில், மகாராஜபுரம் மேற்குக் கிராமத்தில் உள்ள உமாபாலன் வீட்டில், சங்கர் ஒரு மூட்டை நெல் திருடியதும் தெரியவந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் வழக்குப் பதிந்து, சங்கரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.