வேதாரண்யம் பகுதியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அவதியுற்று வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடந்த ஒரு வாரமாக வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கோரும் பணத்தை வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம், டாஸ்மாக் கடைகளில் இருந்து வங்கி கணக்குக்கு வரும் பணம் போன்றவைகளை நம்பியே வங்கிகள் பல நேரங்களில் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், பல ஏடிஎம் மையங்கள் பணம் இல்லாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில், வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் 3 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பகலில் பணம் வைக்கப்பட்டது. ஓரிரு மணி நேரத்திலேயே பணம் தீர்ந்துபோனது. ஆனால், தனியார் வங்கிகள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஏடிஎம் மையங்களில் வழக்கமான பணம் வரவு-செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில், பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இந்த ஏடிஎம்களை பயன்படுத்துவதால் அங்கும் விரைவாக பணம் தீர்ந்துவிடுகிறது. இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கடந்த ஒருவாரகாலமாக அவதியுற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


