9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Published On :

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடல் மார்க்கமாக படகில் கடத்தவிருந்த  6 மூட்டைகளில் இருந்த 192 கிலோ கஞ்சாவை கடலோரக் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (44), வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ்குமார்(30), கடலோரக் காவல் நிலைய ஊர்க் காவல்படை வீரரான பெரியகுத்தகை பகுதியைச் சேர்ந்த ச.மகேந்திரன் (35) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், கஞ்சா மூட்டைகள்,  இலங்கையைச் சேர்ந்த படகு, சுமை ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்,  இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீஸார் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்கிற ராஜ்குமார்(34) புஷ்பவனம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். மற்றொருவரான, பெரியகுத்தகை பகுதியைச் சேர்ந்த மூனீஸ் என்கிற  முனீஸ்வரனை (29) போலீஸார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.