கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

அகணியில் புதிய பள்ளி கட்டடம்: காணொலி மூலம் முதல்வர் திறப்பு

சீர்காழியை அடுத்த அகணி கிராமத்தில் ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை  திறந்துவைத்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சீர்காழியை அடுத்த அகணி கிராமத்தில் ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை  திறந்துவைத்தார்.
அகணி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1.62 கோடி செலவில் 6 வகுப்பறைகள், நூலகம் மற்றும் அலுவலகம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி  மூலம் திறந்து வைத்தார்.
அப்போது, அகணி அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, மாணவ-மாணவியருக்கும், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், அதிமுக சீர்காழி ஒன்றியச் செயலாளர் ஜெய.ராஜமாணிக்கம், ஊராட்சி செயலாளர் மதியழகன், ஒப்பந்தக்காரர் என்.மதியழகன், பேரூர் கழகச் செயலாளர் போகர்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.