நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

நாகை மாவட்டத்தில் சுதந்திர தின விழா

நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றது. 
நாகை புதிய பேருந்து நிலையம், நேரு சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் வி. ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் வரதராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் ஏ.ஆர். நவ்சாத், விவசாயிகள் பிரிவு மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். நிக்கோலஸ், மாணவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி. கோபிநாத், துணைத் தலைவர் உதயசந்திரன், மாவட்டச் செயலாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழையூரில்: கீழையூர் வட்டார காங்கிரஸ் சார்பில் கீழையூர் கடைவீதி, மீனம்பநல்லூர் கடைவீதி, வேட்டைக்காரனிருப்பு கடைவீதி ஆகிய பகுதிகளில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. கீழையூர் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜி. சுப்பிரமணியன், பொருளாளர் எஸ். வெங்கடேசன், கட்சியின்  கிராம கமிட்டி நிர்வாகிகள் கே. லெட்சுமிகாந்தன், பி. மகேந்திரன், பி. குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்து.விஜயராகவன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் திருமலைக்கண்ணன், காவல் நிலையத்தில் ஆய்வாளர் டில்லிபாபு, காவிரி வடிநிலக் கோட்டம் ( கிழக்கு) பொதுப்பணித் துறை அலுவலகத்தில்  செயற்பொறியாளர்  ஆசைத்தம்பி, மாயூரம் கூட்டுறவு நகர வங்கியில் அதன் தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோர்கள்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
பள்ளிகளில்... தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி,  டி.பி.டி. ஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல். சி. உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
டி.இ.எல். சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை  மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், மாணவர்களுக்கு  எழுதுப் பொருள்கள் வழங்கினர். குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் செந்தில்குமார், தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் செயலர் எம். திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்று தேசியக் கொடியேற்றினர்.
தருமபுரம்  குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கடேசன், மழலையர்  பள்ளியில் பொறுப்பாசிரியர் ரேணுகா ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
கல்லூரிகளில்...  மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில், ஏவிசி  கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் என். விஜயரெங்கன்,  பொறியியல் கல்லூரியில் ஆட்சி மன்றக்குழு  உறுப்பினர் பி.என். ரெத்தினகுமார்,  பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் எம். ராஜசேகர் ஆகியோர் தேசியக் கொடியேற்றிவைத்துப் பேசினர்.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், கல்லூரிச் செயலர் எம். திருநாவுக்கரசு, மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் அதன் தலைவர் ஏ. ஜாபிர் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
பொது விருந்து... இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான, மயிலாடுதுறை திருவிழந்தூர்  அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் பொது விருந்து நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி பொது விருந்தை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் து. விஜயராகவன், அதிமுக  நகரச் செயலாளர் விஜிகே.செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அரசியல் கட்சிகள் சார்பில்... காங்கிரஸ் கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர்  எஸ்.ராஜகுமார் தலைமையில், அக்கட்சியினர் கூறைநாடு பகுதியில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் ஒரே நாடு அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ். சங்கரன், பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு, நகரத் தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சீர்காழியில்...
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஞானசெல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில், சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
வட்டாசியர் அலுவலகத்தில் வட்டாசியர் ஆர். சங்கர், சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மேலாளர் ஆனந்தராஜ், சீர்காழி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிங்காரவேலு, சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர்  ராஜேந்திரன், சீர்காழி குற்றவியல்  நடுவர் நீதிமன்ற வளாகத்தில் சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் அந்தந்த இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி விழாவை கொண்டாடினர். 
கல்வி நிறுவனங்கள்: சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் ஜோசுவாபிரபாகரசிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் பிரவின்வசந்த்ஜாபேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன், கல்லூரி இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் ராஜ்கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் பள்ளி முதல்வர் ஹெலன் தேசியக் கொடியை ஏற்றினார். காரைமேடு சாய்ராம் கல்வி நிறுவனங்களில் செயலர் ராஜா தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. வாணிவிலாஸ் உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் பள்ளிச் செயலர் மா. ராமர் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமையாசிரியர் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுபம்வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் தாளாளர் சுதேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், வீரபாண்டியன், அரிமா சங்க தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைத்தீஸ்வரன்கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய வட்ட கிளை அலுவலகத்தில் தலைவர் வி. மணிவண்ணன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பொறையாறில்...
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், எம்எல்ஏ. பவுன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், கல்லூரிச் செயலர் கருணாஜோசப்பாட், தாளாளர் நோயல் ஜெயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் ஜான்சைமன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தரங்கம்பாடி புது எருசேலம் ஆலய பாஸ்டர் நவராஜ், ஆபிரகாம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறையார் சர்மிளா காடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தரங்கை பேராயர் மாணிக்கம் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செம்பனார்கோயில் நபாக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாகி பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ் பண்டிட் ஞானசேகர், பள்ளி இயக்குநர்கள் பிரகித்வேல் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கிராம சபைக் கூட்டம்: திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதேபோல் பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சி, டி.மணல்மேடு ஊராட்சி, மாமாகுடி, மடப்புரம், செம்பனார்கோயில் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
குத்தாலம் பகுதியில்...
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சபீதாதேவி கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) அருள்சேகரன் தேசியக் கொடியேற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மோகனரங்கன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் உ. தனசேகரன் கொடியேற்றினார். குத்தாலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்பிரமணியனும், பாலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திருஞானமும், பெரம்பூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் நடராஜனும் தேசியக் கொடியேற்றி, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டனர்.
ரோட்டரி சங்கத்தில் அதன் தலைவர் எஸ். பாண்டியன் கொடியேற்றினார். குத்தாலம் இந்தியன் ஆயில்  எரிவாயு கிணற்றில் முதன்மை உற்பத்தி மேலாளர் ஜோசப் கொடியேற்றினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் எம்.சி. பாலு கொடியேற்றினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் என். ரெத்தினம் கொடியேற்றினார். ராஜ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஆர். பாண்டியன் கொடியேற்றினார். ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிக். பள்ளியில் தாளாளர் எம்.ஏ. நஜீர் அகமது கொடியேற்றினார்.
குத்தாலம் வட்டம், திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், அதிமுக ஒன்றியச் செயலாளர் சி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.விஜயபாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 பின்னர் விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பொன்னழகு, ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செம்பனார்கோயிலில்...
செம்பனார்கோயில் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமையில், தேர்தல் அலுவலர் வெங்கடேசன் தேசியக் கொடியேற்றினார்.
நீதிமன்ற வளாகத்தில், நீதிபதி திருமணி, நகராட்சி அலுவலகத்தில் பொறியாளர் முகமது இப்ராஹீம், செம்போடை ஆர்.வி. கல்வி நிறுவனங்களில் நிறுவனர் வரதராஜன், பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரி கல்லூரியில் அதன் முதல்வர் முருகன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினார்.
டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஸ்ரீதர், வர்த்தக சங்கக் கட்டடத்தில் அதன் தலைவர் தென்னரசு ஆகியோர் கொடியேற்றினர். வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.