அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

"புயல் நிவாரணம் பாகுபாடின்றி வழங்க வேண்டும்'

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி. 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி. 
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை புயல் நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: புயல் ஏற்பட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளனர். மக்களின் மறு வாழ்வுக்கு நம்பிக்கைக்குரிய வகையில் அரசிடமிருந்து அறிவுப்புகள் இல்லை. அரசு ஏற்கெனவே அறிவித்த நிவாரணத் தொகை மற்றும் 27 வகையானப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதில் தேக்க நிலையுள்ளது. முதியோர் உதவித்தொகை  பெறும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்காதது வேதனையளிக்கிறது. கணக்கெடுப்பில் நேர்ந்த குளறுபடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றிவிட்டு, மறு சாகுபடிசெய்யும் வகையில் விவசாயிகளுக்கு அரசு உதவவில்லை. நிவாரணங்கள் தொடர்பான அறிவிப்பை மறு ஆய்வுக்குள்படுத்த வேண்டும். புயல் பாதித்த பகுதியை பேரிடர் பாதிப்பாக அறிவிக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.