காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காவல் ஆய்வாளர் மீது அவதூறு பரப்பியவர் கைது

திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மீது அவதூறு பரப்பியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:55 am

DIN

திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மீது அவதூறு பரப்பியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
பூம்புகார் அருகேயுள்ள திருவெண்காடு வடக்கு தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜன்(60) . இவர் கடந்த நாள்களுக்கு முன்பு திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மற்றும் திருவெண்காடு காவல் துறை மீது அவதூறு பரப்பும் நோக்கில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டும், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வேலுதேவி திருவெண்காடு காவல் நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் துரைராஜன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி அளித்த புகாரின்பேரில், போலீஸார் துரைராஜனை கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திவிட்டு, பொறையார் கிளை சிறையில் அடைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.