சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சட்டநாதபுரம் கம்பன்நகர் அருகே சாலையோரம் பெரிய புளியமரம் பட்டுபோன நிலையில் பல மாதங்களாக உள்ளது. எந்நேரமும் முறிந்து சாலையில் விழலாம் என்ற அச்சத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். சீர்காழியிலிருந்து திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த பட்டுபோன மரத்தை கடந்து செல்லவேண்டும்.
மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

