நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூர் பாரதி வீதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 14.2.1964-இல் அப்போதைய முதல்வர் பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, மடப்புரம், கிடங்கல், பூந்தாழை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. அத்துடன் மழைக்காலங்களில் ஜன்னல் விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து மின்கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், பல்வேறு சான்றுகளைப் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே
வருகின்றனர்.
ஆகையால், வலுவிழந்த இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

