சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்: அகில இந்திய மக்கள் நலக் கழகம் வலியுறுத்தல்

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் நலக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 5:44 am IST

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் நலக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலப்பாதியில், அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய மகளிரணி தலைவி விஜயா முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் இளையராஜா வரவேற்றுப் பேசினார். மண்டலத் தலைவர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்: 
சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், சமூக ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் கிராம வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கலந்தாலோசிக்க வேண்டும்.  செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் காலியாக உள்ள காவல் ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.  அரசு அறிவித்த கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும்  தனியார் மெட்ரிக் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்கள் அறிவிக்க வேண்டும்.  தாட்கோ மற்றும் பாரத பிரதமர் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு வங்கிகள் நிபந்தையின்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.