நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கீழ்வேளூர் வட்ட கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானோர்

Updated On :23 ஜூலை 2018, 5:42 am IST

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள 8  கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (பொது) - முன்னுரிமையற்றவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - முன்னுரிமையற்றவர், பொது பிரிவு பெண்கள் - முன்னுரிமையற்றவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பொது) - முன்னுரிமை பெற்றவர், பொது பிரிவு - முன்னுரிமை பெற்றவர், ஆதிதிராவிடர் (பொது) முன்னுரிமையற்றவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின பெண்கள்- முன்னுரிமையற்றவர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (பொது) - முன்னுரிமையற்றவர் ஆகிய பிரிவுகளில் தலா ஒருவர் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கவேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 35.  இதர பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 30.  5-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.   
தகுதியானோர்,  கல்வித் தகுதிக்கான சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு, வட்டாட்சியர், கீழ்வேளூர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.