எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

நாகை மாவட்டம், பொறையாறு ராஜம்பாள் தெருவிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு தேர் பவனி மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 5:41 am IST

நாகை மாவட்டம், பொறையாறு ராஜம்பாள் தெருவிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு தேர் பவனி மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அதன்படி, மிக்கேல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சொரூபங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
முன் வரிசையில் பெண்கள் பழங்கள், இனிப்பு வகைகள், புடவைகள், வளையல்கள் அடங்கிய சீர்வரிசை பொருள்களை சுமந்து வந்தனர்.
ராஜம்மாள் தெரு, மொய்தீன் தெரு, மரைக்காயர் வீதி உள்ளிட்ட வீதிகளின் வழியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க பாடல்களை பாடிக்கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, ஆலயத்தில் நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.