தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நேரு யுவகேந்திரா தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

Updated On :23 ஜூலை 2018, 5:47 am IST

நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 
இதுகுறித்து நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் படைக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 28 வயதுக்குள்பட்ட, 10-ஆம் வகுப்பு முதல்  முதுநிலை பட்டதாரிகள் வரையிலான நிலைகளில் கல்வி பயின்ற ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்குத் தேர்வுப் பெறுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். பணிக்கான விண்ணப்பங்களை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்திலிருந்து நேரடியாக பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றின் நகல்களையும், 3 மார்பளவு புகைப்படங்களையும் இணைத்து, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா, நெ.27/28 சட்டையப்பர் தெற்குவீதி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.