6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கோனேரிராஜபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்

குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் வேல்மணி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 4:05 am

குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் வேல்மணி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 5 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், 4 பேருக்கு நெல் நுண்ணூட்டம், உளுந்து நுண்ணூட்டம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், குடும்ப அட்டைப் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாற்றம் என மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டன.  
முகாமில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் என். ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன், தோட்டக்கலை உதவி அலுவலர் கணேசன், வேளாண்மை உதவி அலுவலர் கண்ணன், மண்டலத் துணை வட்டாட்சியர் ஜெனிதாமேரி, வருவாய் ஆய்வாளர்கள் பாரதி, செளந்தரநாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வட்டாட்சியர் திருமாறன் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் அனிதா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.