செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் பெண் சாவு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண், மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :14 மே 2018, 11:57 pm

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண், மாரடைப்பு ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த அரசாலற்றைச் சேர்ந்தவர் பாலாம்பிகா (65). இவர் மன்னார்குடி பகுதியில் உள்ள கோயில்களில் சாமி கும்பிட்டுவிட்டு, கும்பகோணம் செல்வதற்காக நடேசன் தெருவில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த போலீஸார், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், அவர் இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.