மக்கள் குறைதீர் கூட்டம்: 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விபத்து நிவாரணத் தொகையாக ரூ. 1.02 லட்சத்துக்கான காசோலை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு செயற்கை கை, தாட்கோ சார்பில் ஒருவருக்கு சுயதொழில் உதவியாக ரூ. 13.60 லட்சம் மதிப்பிலான வாகனம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் ஒருவருக்கு சலவைப்பெட்டி ஆகியனவும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் 117 பயனாளிகளுக்குத் தலா ரூ. 20,400 மதிப்பிலான மண்பாண்ட மின்விசை சக்கரங்களும் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 237 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்திலிருந்து 20 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...