இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏக்கள் நிவாரண உதவி

செம்பனார்கோவில் அருகேயுள்ள எருமல் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் கூறி,

Updated On :14 மே 2018, 11:55 pm

செம்பனார்கோவில் அருகேயுள்ள எருமல் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினர்.
செம்பனார்கோவில் ஒன்றியம், எருமல் காந்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் புருஷோத்தமன், நாகராஜ், திருவாதுரை, வரதராஜன், செல்வராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ பி.வி. பாரதி நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த செலவில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5,000 மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
அப்போது, எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், வைத்தீஸ்வரன்கோவில் பேருர் கழகச் செயலாளர் போகர்ரவி, கூட்டுறவு வங்கித் தலைவர் கபாடி பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.