திருவெண்காடு அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. பி.வி. பாரதி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மர்மகாய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, மருத்துவர்களிடம் தாமமின்றி சிகிச்சையளிக்க கேட்டுக்கொண்டார்.
அடுத்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் குப்பை மற்றும் முள்புதர்கள் இருப்பதை அறிந்த அவர் ஊராட்சி மூலம் முள்புதர்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன், அங்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வட்டார சுகாதார அலுவலர் கனிமொழி, மருத்துவர்கள் ஜாஸ்மின் பிரிசில்லா, ரம்யாதேவி சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன், துரைகார்த்திக், அமிர்தலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

