நாகை மாவட்டம், சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானம் மற்றும் பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோகுலாஷ்டமியையொட்டி, சீர்காழி தென்பாதியில் உள்ள கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானத்தில், தனி தன்னிதியில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அவல், பொட்டுக் கடலை, சர்க்கரை, சீடை, அதிரசம், வடை ஆகிய பொருள்களால் நிவேதனம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல், பிடாரி தெற்கு வீதியில் உள்ள பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் உருவப்படத்துக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி உறிஅடி நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.சி.எஸ். சேகர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவு

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

