நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கிராமம், கதிர்வேல் செட்டியார் தெருவைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி பாலு மகன் விதன் (21). இவர் கடலூரிலிருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி எதிரே உள்ள புளியமரத்தில் அவரது இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த விதன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

