மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

360 மதுபுட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

நாகை மாவட்டம், சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குக் காரணமான நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On :3 செப்டம்பர் 2018, 2:15 am

நாகை மாவட்டம், சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குக் காரணமான நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தலின்பேரில், தனிப்படை போலீஸார் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில், சீர்காழி அருகே உள்ள திருநகரி- வருஷபத்து பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தலா 650 மி.லி. அளவுகொண்ட 120 மதுபுட்டிகளும், தலா 180 மி.லி. அளவுகொண்ட 240 மதுபுட்டிகளும் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அதைக் கடத்தி வந்த காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சு. தங்கபிரகாஷை (46) கைது செய்து, சீர்காழி மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.