
காலாவதியான உணவுப் பொருள்கள் அழிப்பு
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.20 லட்சம்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜி. செல்வராஜ் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், ஆக. 27-ஆம் தேதியிலிருந்து வேளாங்கண்ணியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவகங்கள், தங்கும் விடுதிகள், பலகார தயாரிப்புக் கூடங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது, சுமார் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், வியாழக்கிழமை வேளாங்கண்ணி குப்பை கிடங்கில், பிரித்துக் கொட்டி அழிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





