திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

ஆதிதிராவிடர் பள்ளித் தலைமையாசிரியருக்கு விருது

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கணேஷ்குமார். இவர் கடந்த 32 ஆண்டுகளமாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதேபோல், வேதாரண்யம் காந்திநகர் (வெட்டியக்காடு) ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றுபவர் பா. வெங்கடாஜலபதி. 
இவர் 31 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த இரு ஆசிரியர்களின் கல்விப் பணியை பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியர்களை பள்ளி ஆசியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்  பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.