
வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையன அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரூ. 3 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் கிராம உதவியாளர்கள் புதன்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் வி. கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். வட்ட இணைச் செயலாளர் ஏ. பாட்சா, அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் எம். தமிழ்வாணன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் நிறைவுரையாற்றினார். வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் நன்றி கூறினார்.
தற்செயல் விடுப்பு... வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் அறிவித்திருந்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 66 கிராம உதவியாளர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






