தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

கடைமடை பாசன வாய்க்காலை தூர்வார வலியுறுத்தல்

கடைமடை பகுதி பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 

Published On :

கடைமடை பகுதி பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் தரங்கம்பாடி தாலுக்காவுக்கு உள்பட்ட பொறையாறு, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், திருவிளையாட்டம், சங்கரன்பந்தல் கிடங்கல் பகுதிக்கான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலர் அமிர்த. விஜயகுமார் அளித்த கோரிக்கை மனு விவரம்: கீழ்மாத்தூர் மஞ்சளாறு தடுப்பணையிலிருந்து பிரியும் ராஜேந்திரன் வாய்க்கால், வெட்டி வாய்க்கால், சீதைசிந்தாமணி வாய்க்கால், கோணிக்கரை வாய்க்கால் மற்றும் அன்னப்பன்பேட்டை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்து வந்த நிலையில், நிகழாண்டு தூர்வாரப்பட்டது. இப்பணி முழுமையாகததால் தண்ணீர் வராமல் சம்பா விவசாய பணி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. எனவே, சம்பா பணியை தொடர வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி தண்ணீர் விட வேண்டும். மேலும், கீழ்மாத்தூர் தடுப்பணையிலிருந்து பிரியும் அனைத்து வாய்க்கால்களில் கட்டப்பட்டு வரும் மதகுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், காழிப்பநல்லூர் விவசாய சங்கத் தலைவர் அருள்தாஸ் பேசியது: இப்பகுதியில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், தூர்வாராமல் உள்ள ஓடை வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் விடவேண்டும் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.