
காரில் மதுபுட்டி கடத்தியவர் கைது
நாகை அருகே புதன்கிழமை காரில் ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபுட்டி கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை அருகே புதன்கிழமை காரில் ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபுட்டி கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், சூரக்காடு முக்கூட்டுப் பகுதியில் தனிப்படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப் படும் வகையில் வந்த காரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த காரில் புதுச்சேரி மாநில 2,880 மதுபுட்டிகள் கடத்தி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் கார் மற்றும் மதுபுட்டிகளை பறிமுதல் செய்து இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







