தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சீர்காழியில் நாளை தேசிய வாக்காளர் தின பேரணி

சீர்காழியில் 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறவுள்ளது.

Updated On :24 ஜனவரி 2019, 2:59 am IST

சீர்காழியில் 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறவுள்ளது.
தினமணி, சீர்காழி ரோட்டரி சங்கம், பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி, சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்திலிருந்து தொடங்குகிறது.
நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை கோட்டாசியர் தேன்மொழி தலைமை வகித்து, பேரணியைத் தொடங்கி வைக்கிறார். வட்டாசியர் இரா. சங்கர், துணை வட்டாட்சியர் (தேர்தல்) கே. ரவிச்சந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் பி. ஜெய்சங்கர், பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் கே. சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் ப. அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, பிரதான வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைகின்றனர்.
அங்கு கல்லூரி நிர்வாகக்குழு துணைத் தலைவர் எஸ்.எஸ்.ஜெ. விசாகர், ரோட்டரி செயலாளர் ஜெ. பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் பொறியாளர்கள் டி. சிவகுரு,  டி. செல்வக்குமார்  ஆகியோர்  வாழ்த்துரை வழங்குகின்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். முத்துக்குமாரசாமி வரவேற்கிறார். உடற்கல்வி இயக்குநர் வி. சீனிவாசன் நன்றி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.