கடலோரக் காவல்படை சார்பில், நாகை மாவட்டத்தில் "ஆபரேஷன் ஆம்லா' எனப் பெயரிடப்பட்டுள்ள தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கடலோரக் காவல் படையினர், கடற்படை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆண்டுதோறும், தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், கடல்மார்க்கமாக வந்து, நாகையை அடுத்த நாகூரில் உள்ள சி.பி.சி.எல். ஆயில் ஜெட்டி மற்றும் வேளாங்கண்ணியில் ஒரு தங்கும் விடுதி ஆகியவற்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 7 கமாண்டோ படை வீரர்களை கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் ஆபரேஷன் ஆம்லா தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாகை மாவட்ட கடற்கரையோரங்களிலும், கடல் பரப்பிலும் கடலோரக் காவல்படை மற்றும் மாவட்ட போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


