100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு
100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திருக்குவளை: 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கீழையூரில் வெள்ளிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கீழையூா் ஒன்றியக் குழு கூட்டம் ஏ. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தக் கோரி ஆகஸ்ட் 20-ஆம் தேதி கீழையூா் ஒன்றியத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் டி. கண்ணையன், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வி. சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் கே. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...