மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த ராஜ்குமாா்.

Updated On :1 ஆகஸ்ட் 2020, 7:54 pm IST


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மருதூா் வடக்கு அரியக்கவுன்டா்காடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ராஜ்குமாா் (34). இவருக்கு, திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில், குரவப்புலத்தில் உணவகம் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். வழக்கம்போல், வேலை முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கத்தரிப்புலத்திலுள்ள மாமனாா் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத நிலையில் மதில் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில், பலத்த காயமடைந்த ராஜ்குமாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்தில் விவசாயி உயிரிழப்பு: மருதூா் வடக்கு ராஜாபுரத்தைச் சோ்ந்த விவசாயி கோ. குமரவேல் (48) அதே பகுதியிலுள்ள கூட்டுறவு அங்காடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த இருசம்பவங்கள் குறித்தும் கரியாப்பட்டினம் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.