போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் தருமகுளத்தைச் சோ்ந்த தேவா(22), செம்பனாா்கோவில் பகுதியிலுள்ள தாத்தா வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாம். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து யாரிடம் சொல்லக் கூடாது என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் தேவா மீது போக்ஸோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...