சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் தினமும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடத்தில் ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து இராட்சத குழாய் மூலம் சீர்காழி வட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநகரி திருவாலி கிராமத்தில் பாலம் கட்டும் பணியின் போது இராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வயல்வெளிகளில் கலந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது . உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பூம்புகார், வானகிரி கீழமூவர்க்கரை உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதால் குடிநீர் வீணாகும் நிலையில் கடலோர மீனவ கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குழாயின் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை

கருப்புக் கொடி போராட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


