சீர்காழியில் கோவில் எதிரே மீன் சந்தை கட்டுவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் சந்தை கட்டப்பட்டு வருகிறது.
மிகவும் முக்கியமான இந்த பகுதியில் விநாயகர் விசர்ஜனம், இறந்தவர்களுக்கு காரியம், திதி கொடுத்தல், ஆடி-18 அன்று காவிரித் தாய் வழிபாடு, புதுமணத் தம்பதிகள் தாலி பிரித்து போடுவது, கோயில்களின் திருவிழா காவடி, கரகம் புறப்படுவது போன்ற இந்து சமய நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே பராம்பரிய விழாக்கள், வழிபாட்டு உரிமை, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க மீன் சந்தை கட்டப்படுவதை கைவிட வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் அரசின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் நகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மீன் விற்கும் போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீன் விற்கும் போராட்டம் மாற்றப்பட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டமாக இன்று நடத்தப்பட்டது.மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் க. பாலாஜி, மாவட்ட செயலாளர் அரு. செல்வம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் செ.சபரிலிங்கம், துணைத் தலைவர் சீனுவாசன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கண்ணன், அமைப்பாளர் அய்யப்பன், வைத்தீஸ்வரன் கோயில் தனசேகர், சீர்காழி நகரத் தலைவர் வெற்றிவேல், நகர செயலாளர் சேகர், இளைஞரணி தலைவர் விக்ரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


