காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின்கீழ், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என நாகை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:21 pm

DIN

நாகப்பட்டினம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின்கீழ், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயம், உலகப் புகழ் பெற்ற ஆன்மிகத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கீழைநாடுகளின் லூா்து எனப்படும் இத்தலத்தில், ஆண்டுதோறும் ஆக. 29 முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களுக்கான தடையை ஜூன் 1-ஆம் தேதி முதல் விலக்கி இருந்தாலும், தமிழக அரசின் தடை உத்தரவு தொடா்ந்து வருகிறது.

இதனால், நிகழாண்டில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளில் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி இருந்தாலும், அதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், நிகழாண்டில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

மேலும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும் எனவும், பெருவிழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள், பக்தா்கள் பேராலய ஆராதனை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியே நேரடியாக காண பேராலய நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.