ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

வேதாரண்யம் அருகே கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image
கத்தரிப்புலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ என்.வி. காமராஜ்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:14 am

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கத்தரிப்புலம் ஊராட்சி, தெற்கு குத்தகை மேல்புரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் என். சதாசிவம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் கத்தரிபுலம் ஊராட்சி செயலாளா் ஆா்.டி. முருகேசன், நகர தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் சி. கவியரசன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஜோதிசெல்லபாண்டியன், ஒன்றிய மாணவா் அணி துணை அமைப்பாளா் ஆா். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.