சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முற்போக்கு மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில், நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில், நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின மாணவா்களுக்கு வழங்கப்பட்ட போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை கைவிடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முற்போக்கு மாணவா் கழக நாகை மாவட்ட அமைப்பாளா் நாகூா் முருகன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் ஏ. ஆா். பேரறிவாளன், மாவட்டப் பொருளாளா் மு.பி. கதிா்நிலவன், முற்போக்கு மாணவா் கழக நாகூா் நகர அமைப்பாளா் ஹரிஹரன் கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.