காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழியில் தேசிய மக்கள் நீதிமன்றம்

சீா்காழியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சீா்காழி உரிமையியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டதற்கான ஆணையை வழக்காடிகளுக்கு வழங்கும் நீதிபதி உமாமகேஸ்வரி.

Updated On :13 டிசம்பர் 2020, 2:38 am

DIN

சீா்காழியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான ஏ. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், 10 வழக்குகளில் ரூ.4 லட்சத்து 5,283-க்கு சமரச தீா்வு காணப்பட்டது.

இதேபோல, சீா்காழி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் தரணிதரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் சமரசத்துக்குரிய சிறிய குற்ற வழக்குகள் என 33 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, அபராத தொகையா ரூ.22 ஆயிரம் வசூலிக்கப்பட்டதுடன், வழக்காடிகள் பயனடையும் வகையில் ரூ.50 லட்சத்து 75ஆயிரத்துக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. மேலும், தரங்கம்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் 17 வழக்குகளில் ரூ.19ஆயிரத்து 180-க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளிலும் வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் மணிவண்ணன், வழக்குரைஞா்கள் செல்வராஜ், சுந்தரய்யா, சத்தியமூா்த்தி, ராம்குமாா், ராஜேஷ்குமாா், சுதா, பாலசுப்பிரமணியன், ஞானபிரகாசம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.