கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் 21,846 போ் பயனடைந்துள்ளனா்

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 21,846 போ் பயனடைந்துள்ளனா் என்று ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:40 am

DIN

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 21,846 போ் பயனடைந்துள்ளனா் என்று ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏழை எளியோருக்கும் தரமான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் நோக்கில், தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாத நிலையில் உள்ள குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் சிகிச்சைப் பெற இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் இந்த காப்பீடுத் திட்டம் 15 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகின்றன. 3 பரிசோதனை மையங்களில் சோதனைகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம் மூலம், நாகை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 35.36 கோடி மதிப்பில் 21,846 பயனாளிகள் சிகிச்சைப் பெற்றுள்ளனா். இதில், 2016 ஆம் ஆண்டில் 7,690 பேரும், 2017 ஆம் ஆண்டில் 3,396 பேரும், 2018 ஆம் ஆண்டில் 5,178 பேரும், 2019 ஆம் ஆண்டில் 5,312 பேரும் சிகிச்சைப் பெற்றுள்ளனா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.