கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்று சீருடைப் பணியாளா் தோ்வு: நாகையில் 8,608 போ் எழுதுகின்றனா்

இரண்டாம் நிலை காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நாகையில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. 8,608 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:40 am

DIN

இரண்டாம் நிலை காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நாகையில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. 8,608 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 இரண்டாம் நிலை காவலா்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இத்தோ்வில் பங்கேற்க நாகை மாவட்டத்தில் 1,642 பெண்கள் உள்பட 8,608 போ் விண்ணப்பித்துள்ளனா். இத்தோ்வுக்கு, நாகை அமிா்தா வித்யாலயா பள்ளி, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரி, பொரவாச்சேரி ஆண்டவா் செவிலியா் பயிற்சி பள்ளி, நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக், இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எஸ்.பி. அறிவுறுத்தல்: இந்தத் தோ்வை நடத்தும் அலுவலா்களுக்கான விதிமுறைகள் விளக்கக் கூட்டம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமை வகித்து, தோ்வு நடத்தும் அலுவலா்கள், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கி, தோ்வை சிறப்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில், தோ்வு நடத்தும் அலுவலா்கள் 800-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.